web log free
May 05, 2024

அமைச்சர்களின் தலையில் போட்டார் மஹிந்த

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பல்வேறான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கிறது. இதனால், ஒருவருக்கு ஒருவர் ஒவ்வொருவர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டிருக்கின்றனர். 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இன்றி, அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவையில்லை என நான் சொன்னேன். எனினும், புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்போர். அரசாங்கத்தை அமைத்து முன்கொண்டு செல்வோம் என கூறினர் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

நாங்கள் ஆட்சியை பெற்று மூன்று மாதங்கள் கடந்துவிட்டனர். நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை.  அதிகாரம் இன்றி ஆட்சியை கைப்பற்ற வேண்டாம் என நான் சொன்னேன். எங்களுடைய அமைச்சர்கள் சொன்னார்கள், “ இல்லை, இல்லை நாங்கள் எடுத்து, இந்த வேலையை செய்வோம். அப்போதுதான் முன்பாக போகமுடியும் இல்லையேல் பின்னே சென்றுவிடுவோம் என்றனர். நாடு பின்னோக்கி சென்றுவிடும் என்றனர். 

மூன்று மாதங்களுக்கு நாட்டை கொண்டுநடத்த கணக்கு அறிக்கையை சமர்ப்பித்தோம். நாட்டுக்காக அதற்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு எங்களுக்கு அல்ல, பாராளுமன்றத்துக்கு உள்ளது. எதிர்க்கட்சி அதற்கு இடமளிக்கவில்லை என்றால். அதன் அர்த்தம்தான் என்ன? இவற்றுக்கெல்லாம் புதிய அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களே பொறுப்பு கூறவேண்டும் என்றார்.