நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளில் இருந்து யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மதவாத தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுதொடர்பில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், சாவக்கச்சேரி, கொடிகாமம் மற்றும் ஊறுகாவற்றுறை ஆகிய இடங்களிலேயே இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிவசேனா அமைப்பினரால் இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரப்பட்டுள்ளன.
இந்து வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு அந்த சுவரொட்டிகளின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.