ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்றுக்காலை 8.10 மணியளவில் நாடு திரும்பினார்.
4ஆம் திகதி இரவு டுபாய்க்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவசரமாக, டுபாய்க்கு சென்றிருப்பது அவ்வளவுக்கு நல்லதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இதேவேளை, கூட்டமொன்றில் உரையாற்றிய அவர்,
பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆகையால், நமது நாட்டுக்குள்ளே தங்கியிருப்பது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான சமூக வலைத்தளம் ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எவ்விதமான முக்கியமில்லாத விஜயமொன்றை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்திருப்பது, கொரோனாவை தொற்றிக்கொண்டு அதனை, இலங்கையில் பரப்பிவிடுவதற்கு ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.