பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் ஆட்சி சீர்குலைந்துள்ளது. அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூர் பிரச்சினை 19ஆவது திருத்தத்தின் பெறுபேறாகும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களை இன்று (05) சந்தித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கூடிய விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.