எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முனைப்பான வேலைகளை பிரதான கட்சிகள் முன்னெடுத்துவருகின்றன.
ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன ஓரணியில் திரண்டுள்ளது. ஏனைய கட்சிகள் கூட்டணி அமைத்து கொண்டிருக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அவசரமாக, இன்று (7) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
பொதுத் தேர்தல் சட்டத்தின் கீழ், 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், சஜித் தலைமையிலான அணி, தனித்து போட்டியிடுவது தொடர்பில் மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.