மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, தாக்குதலில் பலியான இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலியின் மத்திய பகுதியில் ஐ.நா வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் துருப்புக்காவி ஒன்று சேதமடைந்தது.
இதில் பயணம் செய்த கப்டன் ஜெயவிக்ரம, கோப்ரல் விஜேகுமார ஆகியோர் பலியாகினர்.
இந்த நிலையில், இவர்களுக்கு ஐ.நா மூலம், தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உயிரிழந்த படையினரின் சடலங்கள் இன்னும் மூன்று நான்கு நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்றும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார்.