web log free
May 02, 2024

இராதாவை கை கழுவினார் அனுஷா

பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்டுப்பணம் செலுத்தும் சுயேட்சை குழுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர், நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலும் பல்வேறு மாவட்டங்களிலும் சுமார் 15 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரனின் புதல்வியான அனுஷா சந்திரசேகரனும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவர் வே.இராதாகிருஸ்ணனுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே, சுயேட்சையாக போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடவேண்டும் என அனுஷா வலியுறுத்தி வந்தார். எனினும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தீர்மானத்தின் பிரகாரமே போட்டியிடவேண்டுமென இராதா கூறியுள்ளார். 

இதனால், தனக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்ற காரணத்தால், அனுஷா தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.