web log free
July 01, 2025

சஜித்துடன் கணவன்- ரணிலுடன் மனைவி

பாராளுமன்ற தேர்தல் சூடுபிடிக்க, சூடுபிடிக்க பல்வேறான சுவாரஸ்யமான சம்பவங்களும் இடம்பெற்றுகின்றன.

ஆளும் கட்சியாக இருந்தால் என்ன? எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன? சகல அரசியல் கட்சிகளிலும் உட்பூசல்களும் விசித்திரமான சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை.

கொழும்புக்கு நீண்ட தூரத்துக்கு அப்பால் இருக்கும் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய ​தேசியக் கட்சியின் சார்பில் இளம் எம்.பி​ ஒருவர், பாராளுமன்றத்துக்கு கடந்தமுறை தெரிவானார்.

அவர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித்துடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியில்  போட்டியிடவுள்ளார். எனினும், அவருடைய மனைவி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

இதனால், இவ்விருவரும் பிரிந்து சென்று, தனித்தனியாக மறு திருமணம் முடிக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது.   

இவ்விருவரும் நீண்டகாலம் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார். கோபமடைந்த இருவரும் வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர் என அறியமுடிகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd