web log free
May 02, 2024

தனிவழி செல்கிறது சு.க

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கலந்துரையாடிவருகிறது.

பெரமுனவால் முன்னெடுக்கப்படும் கடுமையான விமர்சனங்கள் காரணமாக, இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதற்கு சுதந்திரக் கட்சி கலைந்துரையாடி வருகிறது என அறியமுடிகின்றது.

இதுதொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவில், இன்னும் இரண்டொரு நாட்களில் தீர்மானம் எட்டப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

எவ்வாறான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தே போட்டியிடுவது என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கழுகு தாக்குதல் உரையால் இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வேட்பு மனு தயாரிக்கும் போது, 30 வீத ஒதுக்கீட்டை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.