web log free
April 07, 2026

ரணிக்கே “தொலைபேசியை” எடுத்தார் சஜித்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் முன்னணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவது இறுதியாகிவிட்டது .

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் இந்த முன்னணி போட்டியிட வேண்டுமென சொல்லப்பட்ட போதும் அது சஜித் தரப்பால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.அதேசமயம் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மறுத்து வந்தனர்.

இதனையடுத்து இருதரப்பு சமரச முயற்சிகளை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்டுவந்தார்.அந்த முயற்சிகள் வெற்றியளித்தபோதும் ரணில் முன்னுக்குப் பின் முரணாக செயற்படுவதால் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்ட முடியாத முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்தப் பின்னணியில் சஜித் தரப்பின் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்திலும் – ரணில் தரப்பின் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்திலும் போட்டியிட இறுதியாகியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd