web log free
April 07, 2026

மைத்திரி வணங்கினார்: மஹிந்த ஒப்பமிட்டார்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்,  ஸ்ரீ லங்கா பொதுஜன நிதாஹஸ் பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டார்.

அவர், குருநாகல் மாவட்டத்திலேயே இம்முறையும் போட்டியிடவிருக்கின்றார். கடந்த முறையும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது, ஜனாதிபதி கோத்தாபயவும் இருந்தார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இரு கைகளையும் குவித்து வணங்கி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd