web log free
May 02, 2024

வழிதெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் மைத்திரி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியாகவோ அல்லது தனித்தோ போட்டியிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலைல் ,இன்று கூடும் அதன் மத்திய குழு, தாமரை மொட்டு சின்னத்திலா ,கை அல்லது வேறு சின்னத்திலா போட்டியிடுவது என்பதனை தீர்மானிக்கவுள்ளது.

ஏற்கனவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பொதுத் தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டுமென சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் அதன் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது .

இதேவேளை வரும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு வேட்புமனு வழங்காமல் அவருக்கு தேசியப்பட்டியலில் இடமளிக்கலாமா என்பது குறித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் ஆராயப்பட்டு வருகிறது .

ஏற்கனவே மைத்ரி சர்ச்சைக்குரிய வகையில் உரைகளை ஆற்றியுள்ள நிலையில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது பாதிப்பை ஏற்படுத்துமென பொதுஜன பெரமுன தரப்பின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளதால் இந்த நிலை எழுந்துள்ளது.