முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவுறுத்தி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சீர்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டியே இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டமை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தோல்வியை தழுவியமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் 12 பக்கங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.