ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 193 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டு சமத்துவ அமைச்சர் ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் (45) கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.