எட்டு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாட்டை, இன்று (15) முதல் 2 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு சிவில் விமான சேவை அதிகார சபை தீர்மானித்துள்ளது.
பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 11.59 மணியிலிருந்து எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதியில் குறித்த நாடுகளிலிருந்து பயணிகளை அழைத்து வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய 3 நாடுகளில் இருந்து, இலங்கைக்கு பயணிகளை அழைத்துவரும் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.