வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இதேவேளை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு கொரோனா தொற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த தகவல்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உயரதிகாரி நிராகரித்துள்ளார். அமைச்சர் தினேஷ் குணவர்தன, நேற்றும் முக்கியமான சந்திப்புகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்றிருந்தார்.
இது போலியான செய்தியாகும். அதுதொடர்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையில்லை. எனினும், போலியான செய்தி தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.