கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிவாசலில் அனைத்து தொழுகைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அறிவிக்கும் வரை முஸ்லிம் பள்ளிவாசலில் அனைத்து தொழுகைகளையும் நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.
இன்று (15) இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜம்மியத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கை,
முஸ்லிம் சகோதரர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும்வேண்டுகோள்
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உலக சுகாதாரஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்றுகூடும் சந்தாப்;பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் மஸ்ஜித்களில் ஜுமுஆ,ஐவேளை ஜமாஅத் தொழுகைகள் உட்பட ஏனைய எல்லாவகையான ஒன்றுகூடல்களையும் உடன் அமுலுக்குவரும் வகையில் மறுஅறிவித்தல் வரும்வரை இடைநிறுத்துமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாநாட்டு முஸ்லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் கண்டிப்போடு நடந்துகொள்ளுமாறும் வேண்டுகோள்விடுக்கிறது.
அஷ்-ஷைக்எம்.எம்.ஏமுபாரக்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா