கோரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அவைதொடர்பில் ஆகக் கூடுதலான அவதானம் செலுத்தி, சகல கட்சித் தலைவர்களின் அறிவுரையை பெற்று, நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோருக்கே இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
இதேவேளை, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் தங்களுக்கு அறிவுறுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரியுள்ளார்.