தென்கொரியாவிலிருந்து நாட்டுக்குள் பிரவேசித்து, தடுப்பு மையங்களுக்கு செல்லாது, விமான நிலையத்திலிருந்து தப்பியோடி, தலைமறைவாகியிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டள்ளனர்.
இரத்தினபுரி வீடொன்றில் மறைந்திருந்த போதே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலையத்தகவல்கள் மற்றும் பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கு அமையவே இவர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இத்தாலி, தென்கொரியாவிலிருந்து நாட்டுக்கு திருப்பி, தடுப்பு மையங்களுக்கு செல்லாத சகலரையும் தடுப்பு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறின்றேல். அருகிலிருக்கும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அல்லது பொலிஸ் நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.