web log free
May 07, 2024

இருவர் கைது: 21 பேர் பாதிப்பு- அதிரடி அறிவிப்புகள் பல

கொரோனா வைரஸ் இலங்கையில் வியாபிக்காமல் இருப்பதற்கு, பல்வேறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ​கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  1. ஒருநாள் தேசிய அடையாள அட்டை விநியோகம், நாளை முதல் மறு அறிவித்தல் வரையிலும் நிறுத்தம்.
  2. நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
  3. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹர அலுவலகத்தில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை மற்றும் பரீட்சைகள்,  நிறுத்தப்பட்டுள்ளன.
  4. உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கான திகதி மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு அனுமதி
  5. ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்தவிருக்குமு் பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
  1. நாட்டில் மேலும் மூவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பு, அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

13 வயதுடைய சிறுமி, 50 மற்றும் 37 வயதுடைய ஆண்கள் இருவரும் இவ்வாறு அடையாளர் காணப்பட்டுள்ளனர்.