நாட்டில் மேலும் மூவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதில், 13 வயதுடைய சிறுமி, 50 மற்றும் 37 வயதுடைய ஆண்கள் இருவரும் இவ்வாறு அடையாளர் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நேற்றைய தினம் வரை 18 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் இனங்காணப்பட்டுள்ளார்.
73 வயதுடைய ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் சேர்த்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.