ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முதல் தர விமானிக்கு கொரோன வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
அவருடன் கடமையிலிருந்த ஏனைய விமானிகள், அதிகாரிகள் அவரவர் வீடுகளில் சுயமாக தனித்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.
அந்த விமானி, கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரானா தொற்றுக்கு உள்ளான ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முதலாம் தர விமானியான அவர், கொழும்பு ரோயல் மற்றும் கல்கிஸை சென். தோமஸ் கல்லுரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியையும் கண்டு களித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.