கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதிரடியான அறிவிப்பை விடுத்துள்ளது.
தென்கொரியா, ஐரோப்பா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 1 முதல் 15ஆம் திகதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் நாடு திரும்பியவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையில் பதியவேண்டும்.
அவ்வாறு இன்றேல், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.