அமெரிகாவிலிருந்து நாடுதிரும்பிய அமைச்சர் ஒருவரின் மகன், தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், கடந்த 17ஆம் திகதியன்றே நாட்டுக்கு திரும்பினார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டும், தடுப்புக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையிலேயே, தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு தானாகவே அவர் சென்றுள்ளார்.
அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகனே, இவ்வாறு அனுமதித்து கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.