முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது.
இந்நிலையில், கூட்டணியின் சார்பில், இம்முறை 10 பேர் போட்டியிடவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில், மனோ, இராதா மற்றும் திகா ஆகியோர் நேரடியாக களத்தில் குதிக்கின்றனர். இவர்களுடன் மேலும் ஏழுபேர் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஏழு மாவட்டங்களிலேயே போட்டியிடவுள்ளனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரத்தின் வலது கையாக செயற்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலக்ராஜ் இம்முறை போட்டியிடவில்லை.
அவர், தேசியப்பட்டியிலில் இணைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் மேலும் இருவரும் தேசிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.