ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர், முறையே குருணாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் போட்டியிடவுள்ளனர்.
அவ்விரு மாவட்டங்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த ஆசன பங்கீடு போதாது. ஆகையால், நாங்கள் ஒப்பமிடமாட்டோம் என இவ்விருவரும் முரண்டு பிடித்து கொண்டிருந்தனர்.
எனினும், இவ்விரு மாவட்டங்களுக்கும் தலா ஒவ்வொரு வேட்பாளர்கள் அதிகமாக, சுதந்திரக் கட்சிக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்டதை அடுத்தே. இவ்விருவரும் கையொப்பமிட்டனர்.