web log free
May 09, 2025

சஜித்​ கொழும்பில் போட்டி- தடுமாறுகிறது ஐ.தே.க

பொதுத் தேர்தல் நடைபெறுமா? நடைபெறதா? என்ற சந்தேகத்துக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது, கட்டுப்பணம் செலுத்தல் ஆகியன சூடுபிடித்துள்ளன.

அதில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொழும்பு மாவட்டத்தில் ​போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்துவரும் ஐ.தே.க, யாழ்ப்பாணம் மாவட்டத்தை தவிர, வேறெந்த மாவட்டங்களிலும் தங்களுடைய ​வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சஜித் அணியின் மிக வேகமான செயற்பாடுகள் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சி தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd