web log free
May 09, 2025

8,944 பேர் கொரோனாவுக்கு பலி

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது.

பலி அதிகரிப்பு:

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த வைரசுக்கு இதுவரை 8,944 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது. அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தாலியில் 2,978 பேர் பலி:

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் 35,713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,025 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் 3,237 பேர், ஈரானில் 1,135 பேர், ஸ்பெயினில் 638 பேர், அமெரிக்காவில் 151 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

முதற்தடவையாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி பாகிஸ்தானில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

பிரான்சில் 69 புதிய உயிரிழப்புக்கள் பதிவு.. அங்கு 244 உயிரிழப்புக்கள் இதுவரை நடந்துள்ளன

வைரஸிலிருந்து மக்களை காப்பாற்றும் மருந்து ஏப்ரலுக்குள் கண்டுபிடிக்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. வைரஸ் நிவாரண சட்டமூலம் ஒன்றை அமெரிக்கா நிறைவேற்றஉள்ளது .

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மரியோ டயஸ் பாலர்ட் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இதேவேளை சீனாவும் புதிய மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து சாதகமான முடிவை பெற்றுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை முதல் இங்கிலாந்தில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

இந்த வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் 850 மில்லியன் மாணவர்கள் பாடசாலை போகாமல் இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd