கொரோனா வைரஸ் தொற்று நோயால் இத்தாலியில் ஒரு நாளில் 475 பேர் இறந்துள்ளனர். இதுதான் இத்தாலியில் ஒரே நாளில் இது நாள் வரை அதிகபட்ச உயிரிழப்பு என்கிறார்கள்.
மொத்த இத்தாலியும் மரண ஓலத்தில் தவித்து வருகிறது. உலகத்தை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மொத்தமும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் நடுங்கி போய் உள்ளன.
மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, மாஸ்க், சானிடைசர்கள் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பா மொத்தமும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. குறிப்பாக இத்தாலியில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அங்கு அதிகரித்துவரும் நோயாளிகளை சமாளிக்கும் சக்தி அந்நாட்டு அரசுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.அந்ந அளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
உலகமே கொரேனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் இத்தாலியில் அதிகரிக்கும் மரணங்கள் உலக மக்களை கவலையிலும் அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது. முடங்கியது இத்தாலி முடங்கியது இத்தாலி இத்தாலியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
உத்தரவை மீறும் நபர்களால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால் இத்தாலி மக்கள் செய்வதறியாது திகைத்து விரக்தி அடைந்து வருகின்றனர். 35713 பேருக்கு பாதிப்பு 35713 பேருக்கு பாதிப்பு இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35713 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000த்தை தொட்டுள்ளது. சுமார் 4000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முழுமையாக குணம் அடைந்துள்ளனர்.
இத்தாலியில் மிக மோசம் இத்தாலியில் மிக மோசம் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி தான் உலகிலேயயே மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு ஆகும். ஆனால் மரண விகிகதத்தில் இத்தாலி சீனாவை மிஞ்சும் என அச்சம் நிலவகிறது.
இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 8758 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில் தான்அதிகம் பேர் உயிரிழந்தனர். இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.