கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தாலி உள்ளிட்ட வெ ளிநாடுகள் சிலவற்றிலிருந்து நாடு திரும்பிய நபர்களில் 65 பேர் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்டு வீட்டுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை, 14 நாட்கள் வீட்டுக்காவலில் வைக்குமாறு மாரவில மாவட்ட நீதவான் ஹேஷாந்த மெல் உத்தரவிட்டுள்ளார்.
நாத்தாண்டிய, மாரவில, கட்டுநேரிய, மாரவில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாத்தாண்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழும் 68,406 பேரின் சுகாதார நிலைமைகளை பாதுகாத்துகொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த 65 பேரும் எவ்விதமான தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கும் உள்ளாகவில்லை. இது இதர மக்களின் சுகாதாரத்துக்கு தீங்கிழைக்கும் என்பதால், நீதிமன்றத்தி்ன் உத்தரவை நாடவேண்டிய நிலைமை ஏற்பட்டது என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது