தற்போதை நிலைமையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்தமுடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தலை நடத்தமுடியும் என உலக சுகாதார அமைப்புகள், இலங்கை சுகாதார நிறுவகங்கள் உறுதியளித்தால் அதுதொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்போம். எனினும், மார்ச் 26ஆம் திகதிக்கு பின்னரே எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும் என்றார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கின்றார்.
பொதுத் தேர்தல், மே மாதத்துக்கு தள்ளி போவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன.