மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் குருநாகல் மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட, ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் அடங்கிய அணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அடங்கிய குழுவினரே, களத்தில் குதித்துள்ளனர்.
“அபி ஜன பல கட்சி” எனும் கட்சியின் கீழே, பிக்குகள் அடங்கிய அணி போட்டியிடுகின்றது. இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் போட்டியிடுகின்றனர்.
பாராளுமன்றத் தேர்தலில், ஆகக் குறைந்தது 20 ஆசனங்களை பெறுவதே தங்களுடைய இலக்கு என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷவையும் அத்துரலிய ரத்ன தேரர் கடுமையான விமர்சங்களுக்கு உள்ளாகியிருந்தார். பிக்குகள் அடங்கிய அணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.