நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கள் கிழமை காலை 6 மணிவரைக்கும் அமுலில் இருக்கும்.
இந்நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரடங்கு சட்டத்தை மீறி வீட்டில் விருந்துபசாரத்தை நடத்தி, மதுபானம் அருந்திவிட்டு பாடல்களை பாடிக்கொண்டிருந்தவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை பொலிஸாரினால் இவர்கள் நேற்றிரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.
பண்டாரவளை கிணிகம மஹஉல்பொத பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த வீட்டுக்கு பொலிஸார் வருவதை கண்ட இன்னும் சிலர், தப்பியோடிவிட்டனர்