நெஞ்சுவலியென கூறி, ராகம வைத்தியசாலையில் தன்னைத்தானே அனுமதித்து கொண்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வத்தளை நீதவான் நீதிமன்றத்திலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த நபரை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றை வைத்தியர்களிடம் மறைந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நபர், இத்தாலியிருந்து நாடுதிரும்பிய நபர்களுடன் நெருக்கமாக பழகினார் என்றும் அறியமுடிகின்றது.
அந்த நபருக்கு மட்டுமன்றி, அவருக்கு ஒத்துழைப்பு நலக்கிய நபர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவுள்ளது.
பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழே, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.