கொரோனா தொற்று நோய் பரவுதல் நாடாளுமன்ற எம்.பி.க்களிடையேயும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது . ஏற்கனவே சில அமைச்சர்கள், எம்.பி.க்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
ஜனாபதி ராம்நாத் கோவிந்தும் உரிய விதிமுறைகளின்படி கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வார் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் பாஜக எம்.பி. துஷ்யந்த்சிங் பங்கேற்ற பார்ட்டியில் கலந்து கொண்ட பாலிவுட் பாடகி கனிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக செய்திகள் வெளியானதுதானன் தாமதம்.. துஷ்யந்த் சிங், அவரது தாயார் வசுந்தரராஜே ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
துஷ்யந்த்சிங்கை சந்தித்த எம்.பி.க்களும் கூட தங்களை முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் துஷ்யந்த்சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளித்த விருந்திலும் பங்கேற்றார்
இதனிடையே, ராம்நாத் கோவிந்த் அனைத்துவித சந்திப்புகளையும் தற்போது ரத்து செய்துள்ளதாகவும் உரிய விதிமுறைகளின் படி அவரும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வார் என்றும் ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.