வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இரத்தினபுரியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டொருவருகும் கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் இரத்தினபுரி மாவட்டத்தில் கொரொனா தொற்றின் அச்சம் ஏற்பாட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட உடனயே, மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை உடனடியாக திறப்பதற்கு இரத்தினபுரி மாவட்ட குழு தீர்மானித்துள்ளது.
திங்கட்கிழமை காலையிலேயே வர்த்தக நிலையங்களை திறக்குமாறு மாவட்ட ரீதியில் இன்று (21) அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட செயலகம், பிரதி பொலிஸ் மா அதிபர், மாகாண செயலாளர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த குழுவின் உறுப்பினர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.