முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இதுதொடர்பில், ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அடுத்த பொதுத் தேர்தலில், அந்தந்த கட்சிகள், வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளில் எவற்றிலேனும் என்னுடைய பெயர், வேட்பு மனுவில் சேர்த்துகொள்ளப்படவில்லை. தேசியப் பட்டியலிலும் பெயர் உள்ளடக்கப்படவில்லை. ஆகையால், அரசியல் அர்ப்பணிப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஆகிய இரண்டு அணிகளையும் ஓரணியின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பெரும் பிரயத்தனத்தை முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.