அநுராதபுரம் சிறைச்சாலை ஏற்பட்ட குழப்பகரமான நிலைமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் கைதி ஒருவர் தொடர்பில், ஏனைய கைதிகள் குழப்பமடைந்ததால் அநுராதபுரம் சிறையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள தெரிவித்தன.
நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.