இன்றை நிலவரத்தின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆகும்.
இதில், ஜனவரி மாதம் ஒருவர் இனங்காணப்பட்டார். ஏனைய 77 பேரும் மார்ச் மாதமே இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில், கொழும்பு மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலாக 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும், புத்தளம் மாவட்டத்தில் அறுவரும், களுத்துறை மாவட்டத்தில் நால்வரும் இரத்தினபுரி மாவட்டத்தில் மூவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
குருநாகல், காலி, கேகாலை,மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.