கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் யாழ்ப்பாணத்தில் கண்டறியப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்திருந்து, வெளிநாட்டுக்கே திரும்பியுள்ள போதகர் ஒருவரை தனியறையில் சந்தித்தவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்றுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரையிலும் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட 17 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.