நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைமையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக அதிக விலையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை நாவலபிட்டி பொலிஸார் நேற்று (21) கைது செய்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலபிட்டி பகுதியில் வீடு ஒன்றில் விற்பனை செய்யப்படுவதாக நாவலபிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யபட்டதாகவும் சந்தேக நபர் 45 வயதுடையவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட நபரை நாவலபிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கையினை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.