மனிதர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியவே புரியாது. அதேபோல, உலகமே வீட்டுக்குள் முடங்கியிருக்கிறது.
இந்நிலையில் இலங்கையிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு சட்டத்தை மீறிய 790 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் முச்சக்கரவண்டி உட்பட 154 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
20 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் 22 ஆம் திகதி மாலை 5 மணிவரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
1. விளையாட்டு மைதானத்தில் குழுவாக இருந்து மதுபானம் அருந்தியமை.
2.வாகனங்களை செலுத்தியமை.
3. குடிபோதையில் வீதிகளில் தள்ளாடியமை
4. வியாபார நிலையங்களை திறந்து வர்த்தகம் செய்தமை ஆகிய நான்கு தடைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.