நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டம், நாளை (23) காலை 6 மணிக்கு தளர்த்தப்படுகிறது.
அந்த ஊரடங்குச் சட்டம் மீண்டும் மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்படும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. ஒரு வீட்டிற்கு ஒரு நபர், நகரங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்யலாம்.
2. வெளியே செல்லும் போது முகமூடி அணியுங்கள்
3. பொது போக்குவரத்து, வரிசைகள் மற்றும் ஷாப்பிங் செய்யும் போது நபர்களிடையே 1 மீட்டர் தூரத்தை வைத்திருங்கள்
4. உங்கள் முகத்தைத் தொடாதீ்ர்கள்
5. உங்கள் கைகளை நன்கு கழுவி கொள்ளுங்கள்
6. வீடு திரும்பும்போது குளிக்கவும்