கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர், அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வறக்காபொல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்திய பிரிவில் இணைந்து சேவையாற்றியவர் என அறியமுடிகின்றது.
இதேவேளை, கேகாலை நெலுந்தெனிய பிரதேச சபையின் உறுப்பினர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என்றும் அவர், பல்வேறான கூட்டங்களில் பங்கேற்றுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது என வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.