web log free
June 27, 2026

சர்வதேச நிலையத்தை உருவாக்கும் மஹிந்த ராஜபக்ஷ

சர்வதேச உறவுகளுக்கான மஹிந்த ராஜபக்ஷ நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ இறங்கியுள்ளார்.

சர்வதேச உறவுகளுக்கான மஹிந்த ராஜபக்ஷ நிலையத்தை உருவாக்குவதற்கான ஆவணங்களில், மஹிந்த ராஜபக்ஷ கடந்த 29ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் பங்கேற்றுள்ளார்.

அனைத்துலக உறவுகள், இராஜதந்திரம் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக்கான உலகத்துக்குள் நுழைவதற்காக முதல் படியாக இந்த நிறுவகம் இருக்கும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd