வடமாகாண மக்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்திலிருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில், ஏ-9 வீதியை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பொலிஸ் சோதனை சாவடியை அமைத்தே, இவ்வாறு வடக்கை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எனடுக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைசாவடியை தாண்டி, அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே பயணிக்கமுடியும். வவுனியா உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும்.
எனினும், இந்த சோதனை சாவடியை கடந்து, சாதாரண பொதுமக்கள் பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அங்கு பொலிஸார் மட்டுமன்றி, இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களும், விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கு மேலதிகமாக ஏ-9 வீதியில் மதவாச்சி, மன்னார் வீதியில் வவுனியா, திருகோணமலை வீதியும் மூடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான பாதிரியார் ஒருவர் நடத்திய சமய வழிபாடுகளில், 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
சுவிஸ்லாந்திலிருந்து வருகைதந்திருந்த அந்த பாதிரியார் நாட்டுக்கே திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.