கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (24) அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் கொவிட் -19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாட அவர் இந்த அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, நாளை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.