கொழும்பு அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்த வைத்தியர் ஒருவருக்கும் கொரோன தொற்றியுள்ளது என, சிங்கள இணையத்தள செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த வைத்தியர் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என அறியமுடிகின்றது.