கொரோனா வைரஸ் தனிமைப்படுத்த நிலையமாக பயன்படுத்துமாறு தன்னுடைய தந்தையின் வீட்டை தாரைவார்த்து கொடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமரத்ன, தன்னுடைய வீட்டையும் அப்பணிக்கே வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்வின் ஹொரனையில் உள்ள வீட்டை, அரசாங்கத்திடம் அண்மையில் கையளித்தார்.
அதேபோல, இங்கிரியவிலுள்ள தன்னுடைய வீட்டையும் எவ்விதமான கட்டணங்களும் இன்றி, அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளேன் என்று அறிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, மக்களின் பணத்தை வீணாக்கும் இடமாக கருதப்படும் பாராளுமன்றத்தையும் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.