பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம், அலரிமாளிகைகளில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அங்கு, ஒவ்வொரு தலைவர்களும் ஒரு மீற்றர் தூரத்திலேயே அமர்ந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த கட்ட நடவடிக்கைகளாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கே, சகல கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் மஹிந்த நேற்று (23) அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.